VELLOREHEADLNE: காட்பாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காட்பாடி பகுதியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்த நீர், மோர், பந்தலை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் திறந்துவைத்தார் வேலூர் அடுத்த காட்பாடி தெற்குபகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஏற்பாட்டில் ஓடை பிள்ளை கோயில் அருகில், சித்தூர் பஸ் நிலையம், மண்டல அலுவலகம், ரயில்நிலைய ஆகிய நிழற்கூடத்தில் இளநீர், தர்பூசணி, நீர், மோர், குளிர்பானங்கள் அடங்கிய பந்தலை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் திறந்துவைத்தார். வடக்கு பகுதி செயலாளர் வன்னியராசா, மாநகராட்சி திமுக உறுப்பினர் டீட்டா சரவணன் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.