VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்
காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் பஜார் சார்பில் நடக்கும் கண்காட்சியை திறந்துவைத்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் !!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் திவெல்லூர் கிராண்ட் பஜார் என்கின்ற பல்பொருள் மற்றும் கல்வி கண்காட்சியை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உடன். வேலூர் துணை மேயர் சுனில்குமார், ருக்ஜி ஜூவல்லர்ஸ் ரமேஷ்குமார் ஜெயின், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா, மற்றும் சுரேஷ்குமார், சுபுஹனி, சமூக ஆர்வலர் நோபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
Comments
Post a Comment