இன்று 21 -ம் தேதி கோவை - சென்னை (இன்டர்சிட்டி) விரைவு ரயில்ரத்து

ராணிப்பேட்டை மாவட்டம வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனில், இன்ஜினியரிங் பணிகள் நடந்து வருவதால், கோவை 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் இன்று 21 -ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது, என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.*

தினமும் கோவை ரயில்வே ஸ்டேஷனில் காலை, 6:15 மணிக்கும் புறப்படும், கோவை - சென்னை (12680) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லும். வாலாஜா ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால், இன்று (21ம் தேதி) ஒரு நாள் மட்டும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும்.* சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லாது.

மறுமார்க்கத்தில் மதியம், 2:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை - கோவை (12679) ரயில், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்