வாணியம்பாடி வளையாம்பட்டில் கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதிபள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
தலா ரூ2 லட்சம் நிதி உதவி முதல்வர் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரபீக் (13) விஜய் (13) சூர்யா (11) ஆகிய 3 மாணவர்கள் அருகில் உள்ள (அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்) பள்ளிக்கு (காலை) சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் சைக்கிளில் சென்றனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களுரூவை நோக்கி சென்ற கார் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சிமெண்ட தடுப்பில் ஏறி ரோட்டில் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்த 3 மாணவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து சாலையில் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் சமாதானம் செய்தபின்பு கலைந்து சென்றனர்.
பின்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், எம்எல்ஏ தேவராஜ், கோட்டாட்சியர் (பொ) முத்தையன், தாசில்தார் சம்பத் ஆகியோர் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
வளையாம்பட்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது. இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ2லட்சம் நிவாரண உதவி அறிவித்து உள்ளார்.
Comments
Post a Comment