வேலூர், காட்பாடி பகுதிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை
வேலூர், காட்பாடி பகுதியில் அம்பாலால் குழுமம், ரங்காலயா ராயல், 100 - ம் நெம்பர் பீடி, வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு!
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசோக் ரெசிடென்சி, ஆதித்யராம், அம்பாலால், ரங்காலயா, 100 நெம்பர் பீடி குழுமத்தின் வீடு மற்றும் அலுவலகம், கிடங்கு பகுதிகளில் வருமானவரித்துறையினர் 14-ம் தேதி திடீர் ரெய்டில் ஈடுப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், வேலூர் அம்பாலால் குழுமத்தின் வீட்டுமனை பிரிவு (விஐபி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு) அலுவலகம், ரங்காலயா ராயல் குழுமத்தின் நெருங்கிய உறவினரும் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்,வேலுரில் பஜாஜ், கோட்டக், ஏஐஜி போன்ற தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்சிகளின் ஏஜெண்டான பூபாளம் ராஜசேகர் வீடு காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த 100 நெம்பர் பீடி உரிமையாளர்களில் ஒருவருமான பாபா ஜான் குடோன்களில் அதிரடியாக வருமானவரித்துறையினர் வரி ஏய்ப்பு குறித்த ஆவணங்களை எடுத்து சென்றனர்.
வருமான வரித்துறை ரெய்டால் வேலூர், காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment