வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் சார்பில் மாணவர் அமைப்பு துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறைசார்பில் இந்தியளவில் மாணவர் அமைப்பு துவக்கம்
வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறைசார்பில் அகில இந்திய அளவிலான மாணவர் அமைப்பின் துவக்கவிழா நடை பெற்றது.
பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார். பேராசிரியர் முரளிதர் வரவேற்றார். இயந்திரவியல் துறை தலைவர் டாக்டர் பிரவீன்ராஜ் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் குளிர்சாதனம் மற்றும் காற்றோட்ட அமைப்பின் தலைவர் பிஸ்வநாத்சென் கலந்துகொண்டு மாணவர் அமைப்பை துவக்கிவைத்தார்.
கெளரவ விருந்தினராக ரா னெ'ல் குளிரூட்டுசேவை நிறுவன தலைவர் நெல்லை ராஜன் கலந்துகொண்டார்.
Comments
Post a Comment