காட்பாடி ரயில் நிலையம் அதிநவீன வசதிகளுடன் தயாரகிறது- பணிகள் துவக்கம்

வேலூர் அடுத்த காட்பாடி ரயில் சந்திப்பு நிலையம் ரூ 329 மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்'

பிரதமர் மோடி அரசின் சாதனை

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த காட்பாடியில் சிறப்புமிக்க ரயில்வே சந்திப்பு நிலையம் உள்ளது. புகழ்மிக்க வேலூர் கிருஸ்துவ மருத்துவமனை கல்லூரி (சிஎம்சிஎச்), ஸ்ரீபுரம் தங்க கோயில், விஐடி, என புகழ்மிக்க இடங்கள் உள்ளன.
தினமும் காட்பாடி வழியாக 100க்கும் மேற்பட்ட ரயில்களும், 40 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் இடமாக இந்த ரயில்நிலையம் உள்ளது.
இந்தியா முழுவதும் சில குறிப்பிட்ட ரயில்நிலையங்களை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் மோடி சீரமைக்கப்பட அதற்காக நிதி ஒதுக்கினார்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் சந்திப்பு நிலையத்தை மறுசீரமைக்க ரயில்வே துறை ரூ 329.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப பணி துவங்கி உள்ளது.
சென்னை, மற்றும் குர்கானில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் இந்த பணியை 3 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பழைய கட்டிடங்கள் படிப்படியாக இடிக்கப்பட்டு தெற்கு மற்றும் வடக்கு முணையங்கள் அமைக்கப்பட உள்ளன.
புதிய தொழிற்நுட்பத்துடன் 4 மாடி அமைக்கப்படவுள்ளது. இதில் பயணிகள் உதவி மையங்கள், காத்திருப்புமையம், முன்பதிவு பயணிகள் சீட்டு மையம், குழந்தைகள் பராமரிப்பு மையல், வணிக நிறுவனங்கள், நடைமேடை என கட்டப்படவுள்ளது. மேலும் நவீன வசதிகளுடன் 258 கார் பார்கிங், 2,120 இருசக்கர வாகன நிறுத்தம் இடம் என கட்டப்படவுள்ளது.
காட்பாடி ரயில் சந்திப்பு நிலையம் மறுசீரமைப்பு மூலம் 3 வருடங்களில் முடிக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு மேலும் ஒரு மகுடம் இந்த காட்பாடி ரயில்வே சந்திப்பு நிலையம். இது பாரத பிரதமர் மோடியின் மேலும் ஒரு சாதனை ஆகும்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்