வேலூர் பகுதியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை- ஆட்சியர் தகவல்
வேலூர் பகுதியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், செய்தி ம|க்கள் தொடர்பு அலுவலகம் மூலம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது. நமது மாவட்டம் பேர்ணாம்பட்டு அதை சுற்றியுள்ள மலைப்பகுதியில் காட்டுக்குள்ளே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட து.
இருந்தபோதிலும், தேவையான தற்போது முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் சில செய்திகள் வேலூர் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்ததாக தவறான தகவல் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அந்த தவறான செய்தியை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment