வேலூர் பாலாற்று பகுதியான பெருமுகை, அரும்பருதி விதிமீறி மணல் அள்ளல், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூர் பாலாற்றில் விதிமீறல் மனு
மணல் அள்ள நிபந்தனைகள்
அரசாணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம் பெருமுகை ஊராட்சி, அரும்பகுதி பகுதியில் உள்ள பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நீர்மட்டம் குறைந்துவருகிறது.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நீதிபதி டி.ராஜா (பொ) நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று (13-ம் தேதி) விசாரணை மேற்கொண்டது.
அமர்வு நீதிபதிகள் கூறியிருப்பதாவது:இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கையையும், மணல் அள்ள விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பான அரசாணையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 20-ம் தேதி தள்ளிவைத்தனர்.
படம்: அரும்பருத்தி பாலாற்றில் விதிமீறி மணல் அள்ளும் டிராக்டர்கள்.
Comments
Post a Comment