வேலூரில் தமிழ்நாடு நிலஅளவைத்துறை அலுவலர் சங்க முப்பெரும் விழா
வேலூரில் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
வேலூர் பழைய பஸ் நிலையம் டவுன்ஹாலில் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்க ம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் பிரபு வரவேற்றார். மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்புரையாற்றினார். கூடுதல் இயக்குநர் (பொ) மத்திய நில அளவை இணை இயக்குநர் கண்ணபிரான், முன்னாள் மாநில தலைவர் பசுலுதீன், ராஜகோபால்,, துணைத்தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பேசினர்.
விழா அழைப்பாளர்களான ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஜெயபால், வேலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசன்னா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். முடிவில் மாநில பொருளாளர் தங்க.செல்வம் நன்றி கூறினார்.
Comments
Post a Comment