வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா குகையநல்லூர் பொன்னையாற்றின் குறுக்கே ௹ 12.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தடுப்பணை பணியை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.உடன் அதிகாரிகள் உள்ளனர்.
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்பிகே பள்ளியில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு உறுதிமொழி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்பிகே மழலையர் மற்றும் தொடக்கபள்ளியில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . இதில் பள்ளி முதல்வர் எம்.பிரகாசம், தலைமை ஆசிரியர் ஹரிஷ்னி, துணை தலைமை ஆசிரியர் நர்மதா, ஆசிரியைகள் சுகன்யா, கலையரசி, உதவியார் வினிதா மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
வேலூர் அடுத்த காட்பாடி பவானி நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றி அன்னதானம் வழங்கினர். வேலூர் மாவட்டம் காட்பாடி பவானி நகர் ( 7-வது வார்டு) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேலஷ்சி திரையரங்கம் எதிரில் கட்சி கொடியை காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றிய பொறுப்பாளர் நவீன் ஏற்றி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் தாஹிராபானு, இப்ராஹிம் ,பாவனி நகர் பொறுப்பாளர்கள் கார்த்தி, மோகன், வெங்கட், அண்ணாமலை, நந்தா, பிரபு, பிரகாஷ், விக்னேஸ்வரன், மோகன்லால், ஹரி, நித்யாதரன், ராஜா, பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் பஜார் சார்பில் நடக்கும் கண்காட்சியை திறந்துவைத்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் !! வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் திவெல்லூர் கிராண்ட் பஜார் என்கின்ற பல்பொருள் மற்றும் கல்வி கண்காட்சியை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன். வேலூர் துணை மேயர் சுனில்குமார், ருக்ஜி ஜூவல்லர்ஸ் ரமேஷ்குமார் ஜெயின், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா, மற்றும் சுரேஷ்குமார், சுபுஹனி, சமூக ஆர்வலர் நோபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
Comments
Post a Comment