வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி,
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி (49). இவரது மகன் கடந்த 2018-ம் ஆண்டில் லாரி மோதியை விபத்தில் உயிரிழந்தார்.
ஆனால் சம்மந்த காவல்நிலையம் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) தவறுதலாக பதிவு செய்த காரணத்தால் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.
காவல்நிலையம் முதல் எஸ்.பி.அலுவலகம் வரை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பலமுறை அலைகழித்து உள்ளனர்.
இதனால் மணஉளச்சலுக்கு ஆனான கோட்டீஸ்வரி நேற்று திங்கள்கிழமை வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்னை பாட்டிலை எடுத்து தன் மீது ஊற்றியபோது அருகில் இருந்தபோலீசார் தடுத்து நிறுத்தினர்.
பிறகு கலெக்டர் குமாரவேலுவிடம் மனு கொடுத்தார். கலெக்டர் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
Comments
Post a Comment