காட்பாடியில் ரயில்வே குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்


காட்பாடி ரயில் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்
காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், குரு, ஆர்.கே அறக்கட்டளை, கோரமண்டல், கேலக்சி லயன் சங்கம் இணைந்து காட்பாடி ரயில் நிலையத்தில் பணி செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் இன்று காட்பாடி ரயில் நிலைய சுமை இறக்கும் மையத்தில் நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  முன்னதாக ரமேஷ் குமார் ஜெயின் வரவேற்றார்.
கோரமண்டல் பெர்டிலைசர் நிறுவன மண்டல மேலாளர் என். சங்கர், அலுவலர் கோபி, ஆர்.கே.அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன், ரெட்கிராஸ்  துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ருக் ஜி ராஜேஷ் குமார், ஜனசிக்க்ஷா நர்சிங்கல்லூரி முதலவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாநகராட்சியின் 5வது வார்டு உறுப்பினர் சித்ரா மகேந்திரன், மேலாண்மைக்குழு உறுப்பினர்டாக்டர் வீ.தீனபந்து, ஜி.செல்வம், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், டி.செல்வமணி, ஜெ.கஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் எல்.நவீன், ஆர்.சுடரொளியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருத்துவர் எஸ்.சரிதா தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.  இந்த முகாமில் இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், உடல் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு அனைவரும் உரிய மருந்துங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டன.
காட்பாடி இரயில்வே சந்திப்பு ரயில் நிலையில் பணி செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 250 பேருக்கு இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்