வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் முன்னாள் இராணுவ வீரர்களின் ஒருங்கிணைந்த சங்கம்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி அரங்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளடக்கிய எல்லா சங்கங்களையும் ஒன்றாக இணைத்து தமிழ்நாடு அளவில் ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள் மூல முன்னாள் இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை பெறுவது. புதிய நிர்வாகிகள் தேர்வு, சங்கம் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இராணுவ வீரர்களுக்கு உள்ள சலுகைகளை சங்கத்தின் மூலம் வாங்கி தருதல், ஒய்வூதிய திட்டத்தை முறைப்படி பெறுதல், வீரமங்கைகளுக்கான சலுகைகளை உடனுக்குடன் பெற்று தருவது, முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வீடு மற்றும் குடிநீர் வரிவிலக்கு கோருதல்,
இராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ராணுவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன். படுத்த வேண்டும்.
சுமார் 7, 500 முன்னாள் இராணுவ வீரர்களை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த முன்னாள் இராணுவீரர்கள் சங்கம் அமைத்து மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க மாநில தலைவர் வேதபிரகாஷ், நிர்வாகிகள் சண்முகம், விநாயகமூர்த்தி, முனிசாமி, வெங்கடேசன், ஏழுமலை, ஜெயராஜ், களவிநாதன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
ஏற்பாடுகளை ரியல் ஹீரோஸ், வேலூர் வீர் ஜவான்ஸ்நலச் சங்கம். வேலூர் மாவட்ட மற்றும் தமிழக இராணுவ அமைப்பு குழுவினர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment