கே.வி.குப்பத்தில் சூரைக் காற்று மழையில் விழுந்தமரம் மீண்டும் எழுந்து நின்றது.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த வேப்பங்கநேரி ஊராட்சி ரயில்வே கேட் ஒட்டி படவேட்டம்மன் கோயில் உள்ளது இந்த கோயில் வளாகத்தில் முன்புறம் 50 ஆண்டு பழமை வாய்ந்த மரம் நேற்று முன்தினம் சூரை காற்றுடன்பலத்த மழை பெய்தது அப்போது மரங்கள் வீடுகள் பல சேதம் அடைந்தன.
அப்போது கோயில் எதிரில் உள்ள மரம்வேரோடு சாய்ந்தது மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு அப்படியே விட்டு விட்டு சென்றனர் அதன் பிறகு காலையில் வந்து பார்த்தவுடன் வேருடன் சாய்ந்து தரையில் கிடந்த மரம் அடிப்பகுதி மீண்டும் எழுந்து நின்றுள்ளது இதனால் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர் இது குறித்து அப்பகுதி முழுவதும் தகவல் பரவிய உடன் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சாய்ந்து கிடந்து விழுந்து கிடந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டதால் மரத்தின் எடை குறைந்துள்ளது இதனால் மரம் அதன் புவி ஈர்ப்பு சக்தியால் தானாக எழுந்து நின்றுள்ளது என்றும் இது தெய்வ சக்தியால் நடந்தது என்றும் கூறுகின்றனர்
Comments
Post a Comment