காட்பாடியில் அம்புலன்ஸ்க்கு உடனடி வழி ஏற்படுத்தி கொடுக்காத போக்குவரத்து போலீசார்
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் கொண்டு செல்வது வழக்கம்.
ஆனால் காட்பாடி போக்குவரத்து காவல்துறையினர் பெரும்பாலும் தங்கள் பணியை சரியாக செய்வதில்லை.
தங்களுடைய போலீஸ் அதிகாரிகள் வாகனத்தில் வந்தால் வாக்கி - டாக்கி மூலம் தகவல்கள் தந்து வழி ஏற்படுத்தி கொடுக்கின்றனார்.
ஆனால் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்சியர் வாகனத்தை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.
30 -ம் தேதி இரவு 7.40 மணிக்கு சித்தூர் பஸ் நிலையம் சிக்னலில் சித்தூர் பகுதியிலிருந்து வரும் ஆம்புலன்ஸ்க்கு கிரீன் சிக்கனல் போடாமல் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ரெட் சிக்னல் போட்டுவிட்டு ஹாய்யாக உட்கார்ந்து கொண்டு உள்ளார்.
ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேகமாக எடுத்து சென்றார்.
'ஆகவே போக்குவரத்து காவல்துறையினர் தங்களுடைய ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து.
காட்பாடி போக்குவரத்து ஆய்வாளர் இதை கண்காணிக்கவேண்டும்.
எப்போதும் சுற்றி கொண்டு இருந்தால் மட்டும் போதாது.
பதிவு நேரம்: இரவு 8.10 மணி-30.03.2023
Comments
Post a Comment