காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமர் பிறந்தநாளை முன்னிட்டு ராமநவமி கொண்டாடப்பட்டது.
காலையில் ஆஞ்சநேயருக்கு பால்,தயிர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
மாலையில்தொடர்ந்து அர்ச்சனை பக்தர்களுக்கு நடத்தப்பட்டது.
அனைத்து பக்தர்களுக்கும் திவ்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
அலங்காரத்தை கோயில் பட்டாச்சாரியர் கண்ணனும் ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்து இருந்தது.
Comments
Post a Comment