கண்ணமங்கலம் புதுப்பேட்டையை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி இறந்தும் பலரை வாழவைத்தவர்
இறந்தும் பலரை வாழவைத்த இராணுவ வீரரின் மனைவி
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தற்போது இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெயர் சத்யா (37), இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
இராணுவ வீரர் செந்தில்குமார், தன்னுடைய மனைவியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தார்.
அதன்படி இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், லங்ஸ்காவேரி மருத்துவமனைக்கும், லிவர் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், கிட்னி தலா ராமச்சந்திரா, அப்போலோவுக்கும் கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும்தானமாக வழங்கப்பட்டது.
இவருக்கு 8 மற்றும் 4-ம் வகுப்பு படிக்கும் 2 பெண்பிள்ளைகள் உள்ளன.
தான் இறந்தும் 6 பேருக்கு வாழ்வு கொடுத்த சத்யாவின் ஆன்மா சாந்தி அடையவேண்டுகிறோம்.
Comments
Post a Comment