புகழ்பெற்றவள்ளிமலை சுப்பிரமணியர் தேரோட்டம் துவங்கியது
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா முக்கிய நிகழ்வான வள்ளிமலை தேரோட்டம் வியாழக்கிழமை மாலையில் தேர்துவக்க விழா நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஹரோகரா, ஹரோகரா கோஷத்துடன் தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மலையை சுற்றிவந்து நிலையை அடையும். மறுநாள் வள்ளியம்மை திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அறநிலைதுறையினர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment