காட்பாடியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாநகரமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே அப்பு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாநகரமாவட்ட அதிமுக அவைத்தலைவர் எம்.ஆர்.ரெட்டி, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன், வண்டறந்தாங்கல்பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment