குடியாத்தம்தாலுகா அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ஹெட்சர்வேயர், அசிஸ்டெண்ட் கைது

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு௹15ஆயிரம் லஞ்சம் வாங்கிய
ஹெட்சர்வேயர், உதவியாளர் உள்ளிட்ட 2 பேர்  கைது


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையத்தை சேர்ந்த வேலு என்பவர் தன்னுடைய நிலத்தை அளந்து தர குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள முதுநிலை நிள அளவையர் விஜய் கிருஷ்ணா (47) வை அணுகினார். விஜய்கிருஷ்ணா அதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அளந்து கொடுக்கிறேன் என்று கூற இதுகுறித்து வேலு வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் விஜய்தலைமையில் காவலர்கள் தாலுகா அலுவலகத்தில் மறைந்து இருந்தனர்.
ரூ 15 ஆயிரத்தை வேலு, விஜய்கிருஷ்ணாவிட கொடுக்க அவன், தனது உதவியாளர் கலைவாணன்(27) கொடுக்க சொன்னான். கலைவாணனிடம் லஞ்ச பணத்தை கொடுக்கும்போது மறைந்து இருந்த விஜிலென்ஸ்காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் ஹெட்சர் வேயர் விஜய்கிருஷ்ணா, உதவியாளர் கலைவாணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இச்சம்பவம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்