வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம். 06.04.2023 பதிவு நேரம்: 17:30
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர்சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா மீது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு, தலைவர் ஜெயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செளந்திரராஜன் வரவேற்றார்.
மாநில தலைவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
அமைப்பு செயலாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment