காட்பாடியில் நிருபர்களை சந்தித்த வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் 07.04.2023 பதிவு நேரம் :17:55

காட்பாடியில் வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் செய்தியாளர்கள் சந்திப்பு


வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமணமண்டபத்தில் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின், வயலார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கோர்ட் பறித்ததை அடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடியில் சத்தியகிரக போராட்டம் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்டது.
ரயில் மறியல் போராட்டமும் தமிழக முழுவதும் நடைபெற உள்ளது.
மேலும் தொடர்ந்து பிஜேபி அரசை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு வைதர வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் சித்ரஞ்சன் (எஸ்.சி. பிரிவு) காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல தலைவர் பாலகுமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் பிரேம்குமார், ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர் வசிஷ்டர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்