ரேசன் கடையடிப்பு வாபஸ் - அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில செயலாளர் செல்வம் அறிக்கை 08.04.2023 13:40
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.ஜெயசந்திரராஜா மீது சிதம்பரத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டிய சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சனிக்கிழமை இச்சங்கத்தின் ரேசன்கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.அது வா பஸ் பெறப்பட்டதாக சங்க செயலாளர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து மாநில செயலாளர் எம்.செல்வம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜாவை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டி போராட்டம் நடத்தியதின் காரணமாக 7 நபர்களை காவல்துறை கைது செய்து உள்ளனர்.
எனவே 8-ம் தேதி சனிக்கிழமை நடத்த இருந்த ரேசன்கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதற்கு உறுதுணையாக இருந்த விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனவே அனைத்து பணியாளர்களும் வேலைக்கு திரும்பும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment