வேலூர் வள்ளலாரில் நடந்ததமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநிலகவுரவத் தலைவர் சி.ராஜவேலு, 09.04.2023 18:00
வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துறை பணியாளர்கள் மாநில அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் திடக்கழிவு பணியார்கள், டெங்கு பணியாளர்கள் மற்றும் அரசு தோட்டக்கலைப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,
தோட்டக்கலைத்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்,
தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணை எண்.139/22 -ன் படி தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் இனி அனைத்து காலிப்பணியிடங்களையும் அவுட் ஸோர்சிங் முறையில் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணியமர்த்தபடி இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
வேலூர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் சி.ராஜவேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.மாவட்ட செயலாளர் பாலாஜி சிங், தாண்டவமூர்த்தி, முனுசாமி, முத்துச்சாமி, மனோகரன், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment