வேலூர் மாநகராட்சி 12 -வது வார்டுதிமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து
வேலூர் மாநகராட்சி 12வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணனுக்குபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் துணை மேயர் சுனில் குமார்
வேலூர் மாநகராட்சி அறுப்புமேடு 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான டீட்டா சரவணன் தனது பிறந்த நாளை இன்று 27-ம் தேதி வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடினார்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி தாலுகா, சேவூர் சாந்தி இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன் தனது 12வது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். டீட்டா சரவணனின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி திமுக செயலாளருமான எம். சுனில் குமார் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.
Comments
Post a Comment