காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் 20 - ம் ஆண்டு விழா


வேலூர் காட்பாடி காந்திநகர்  துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 20வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வி.பழனி தலைமை தாங்கினார்.  முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார்.  பள்ளி தலைமையாசிரியை த.கனகா, ஆண்டறிகை சமர்த்து பேசினார். 
பரிசு சான்றிதழ் வழங்கி சிறப்புரை
போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் துணை ஆட்சியர்  பி.சுமதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 
வாழ்த்துரை
அரசு வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சாமுண்டீஸ்வரி குணாளன், பி.சிவசங்கரி பரமசிவம், பகுதி செயலாளர் என்.பரசிவம், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு ஓய்வுபெற்ற கல்லூரி கல்வி துணை இயக்குநர் முனைவர் எம்.கே.கஜபதி, வேலூர் அரசு கல்வியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் முனைவர் கலைச்செல்வன், அறங்கவலர் எம்.சுவாமிநாதன், காங்கேயநல்லூர் விஸ்வ வித்யாலயா பள்ளியின் செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
பள்ளி மாணவர்களின் மாறுவேட போட்டி, இசை, நடனம், நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றது.  பள்ளி ஆசிரியைகள் சே.சித்ரா, சு.மலர்கொடி, இரா.தனலட்சுமி, வெ.பாரதி,  ப.கஸ்தூரி தணிகைசெல்வம், கோரந்தாங்கல் உதவி அஞ்சலக அலுவலர் வெ.கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் உதவி தலைமையாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்