காட்பாடி ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது.
இந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் (எஸ்.சி. பிரிவு) பொதுச்செயலாளர் சித்ரஞ்சன், காட்பாடி ஒன்றிய கமிட்டிதலைவர் இளங்கோ, சிறுபான்மை பிரிவு தலைவர்வாகித், ஓ.பி.சி.மாநில செயலாளர் ரவி, வேலூர் மாநகராட்சி முதல்மண்டல தலைவர் பாலகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி கொடியை ஏந்தி பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காலை சுமார் 10 மணிக்கு (9.40க்கு வரவேண்டியது) தாமதமாக வந்த பிருந்தவன் எக்ஸ்பிரஸ் இஞ்சின் முன் திடீரென இறங்கி காங்கிரஸ் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வேலூர் மாவட்ட (ஐஎன்டியூசி பிரிவின்) டிசிடியு தலைவர் பிரேம்குமார் ரயில் இஞ்சின் முன் ஏறிவிட்டு கோஷம் போட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் பைலட், உதவி பைலட் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரை இறங்க சொல்லி அழைத்து சென்றனர்.
அதன்பிறகு சுமார் ஆண் மற்றும் பெண் உள்ளிட்ட 70 பேரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Comments
Post a Comment