வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் கோடை வெப்பம் தாங்காமல் உயிரிழப்பு
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்தனர்.
இந்த நிலையில் பகல் வேலுர் அடுத்த பெருமுகை பகுதியை சேர்ந்த மேஷாக் (61) என்பவர், தனது மகன் சாம்ராஜ்(23) என்பவருக்கு வேலை வேண்டி பகலில் மனு கொடுக்க வந்தார்.
வெய்யிலின் கொடுமை காரணமாக அவர் உட்கார்ந்து இருந்த சிமெண்ட் இருக்கையில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்.
அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், வரும் வழியில் உயரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சத்துவாச்சாரி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இந்த உயிரிழப்பு சம்பவம் மேஷாக்குடும்பத்தினர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் பகுதியில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் 100 டிகிரிக்குமேல் வெய்யில் பதிவாகிவருகிறது.
Comments
Post a Comment