காட்பாடியில் திமுக சார்பில் இசுலாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் திமுக காட்பாடி தொகுதி சார்பில் ரம்ஜான் முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் இசுலாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் (பிரியாணிக்கு தேவையான பொருட்கள்) வழங்கும் விழாவில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் கலந்துகொண்டு வழங்கினார்.
விழாவில் வேலூர் துணை மேயர் சுனில்குமார், முதலாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, பகுதி செயலாளர்கள் வன்னியராஜ், பரமசிவம், திமுக மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment