ஒடுக்கத்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி துவக்கவிழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுக்கத்தூர் பஸ் நிலையம் அருகில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கிளை துவக்கப்பட்டது.
இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கிவைத்தார். பின்பு அன்னதானம் வழங்கினார்,
இந்து ஆட்டோ முன்னணி நிர்வாகிகள் மூர்த்தி, சுதாகர், பிரவின்குமார், தனசேகர், சம்பத், ஜெயபிரகாஷ், ஜெயபால், ராஜேஷ், குமார், பாபு, மோகன், ரஞ்சித்குமார், சுஜிகுமார், அசோகன் மற்றும் கிளை சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்து ஆட்டோ சங்கமாவட்ட செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment