வேலூர் மாநகராட்சியில் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர்கள்

வேலூர் மாநகராட்சியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு


தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், அந்த பணிகளை மாவட்டம்தோறும் சென்று ஆய்வு செய்த மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
துறை அமைச்சர்களும் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சி பணிகளை தீவிரபடுத்தி வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாநகராட்சியின் திட்டப்பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வேலூர் மாநகராட்சி முதல்மண்டலத்தில் அம்ரூத்திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மதி நகர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.
இதில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் கமிஷ்னர் ரத்தினசாமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் மற்றும் மாநகராட்சி, அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்