வஞ்சூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து யாருக்கும் காயம் இல்லை.
வேலூர் அடுத்த காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய எல்லைக்குட்பட்ட வஞ்சூர் பாபு என்பவரது தகர ஷீட் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் காட்பாடி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குழுவாக தீயணைப்பு ஊர்தியுடன் விரைந்து சென்று தீயை மேலும் பரவ விடாமல் அணைத்தனர்.
Comments
Post a Comment