வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசுக்கு பணி நிறைவு & பாராட்டு விழா
வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.
கடந்த 1990-ம் ஆண்டியிலிருந்து 33ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் அருளரசு பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார்.
சென்னை தொழிற்நுட்ப கல்வி இயக்குநகரத்தில் கூடுதல் இயக்குநராக (தேர்வு) பணிபுரிந்தார். வேலூர் மண்டலத்தில் 34 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர்.
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியின் கட்டமைப்புவளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். இங்கு வங்கி ஏடிஎம்.உடற்பயிற்சி கூடம், உணவகம், கூட்டுறவு அங்காடி, ஆவின்பாலகம், கண்காணிப்பு கேமரா என பல்வேறு திட்டங்களை செய்துமுடித்தார்.
இப்படி ஒரு அரசு பொறியியல் கல்லூரி இருப்பது பலருக்கு தெரியாது. இதை மாவட்டம் முழுவதும் இல்லாமல் மாநிலம் முழுவதும் அறிய பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து செயல்பட்ட இக்கல்லூரி முதல்வர் டாக்டர் மா.அருளரசுவின் பணிக்காலம் இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது.
அதற்காக அவருக்கு பாராட்டு மற்றும் பணி நிறைவு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.
இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் தமிழ்நாடு லோக் ஆயத்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் (ஓய்வு) திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள், முன்னாள் சுதாதாரதுறை அமைச்சர் விஜய், முன்னாள் எம்எல்ஏ கலையரசன், கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியர்கள் ரகீலா பேகம், பிரவின்ராஜ், கலைவாசன், வழக்கறிஞர்கள் அண்ணாமலை, பாலசந்தர், கென்னடி, கல்லுரி உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வாரியார், குமார், லட்சுமணன், அப்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment