திருவலம் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் பணி ஓய்வு& பாராட்டு விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மனோகரன். இவர் சுமார் 39 வருடங்களாக பல காவல் நிலையங்களில் மிகச் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். தற்போது திருவலம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக சிறப்பாக பணியாற்றி நேற்று முதல் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் மற்றும் பல காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பத்திரிகை துறை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு காவல் உதவி ஆய்வாளர் மனோகரனுக்கு தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டு களையும் தெரிவித்தனர். பணிநிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தன்னை பாராட்டி யும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்