அதிமுக சார்பில் காட்பாடி, வேலூரில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் முன்னிட்டு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜெயபிரகாஷ், காட்பாடி பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன். வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், வட்ட செயலாளர் திருநாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை வேலூர் மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான கே.பி.ரமேஷ் செய்து இருந்தார்.
விருதம்பட்டில் நடந்த விழாவில் அன்னதானம் மற்றும் புடவைகளை மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வழங்கினார். இதில் மாணவரணி மாநில துணை செயலாளர் எம்.டி.பாபு, நீல. விஷ்ணுகுமார், 15-வது வட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment