குடியாத்தம் கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம், பக்தர்கள் பரவசம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரையோரத்தில் உள்ள கெங்கையம்மன் சிறப்புமிக்கது, அதன் திருவிழாவும் மாவட்டயளவில் பெரியது.
நேற்று தேரோட்டம் நடந்தது.
அதன்படி திங்கள்கிழமை (15-ம் தேதி) விடியற்காலை தர்ணாம்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆராதனை பூஜை செய்யப்பட்டு, விடியற்காலை 5 மணியளவில் கங்கை அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு தரணம்பேட்டை, என்.ஜி.ரெட்டி தெரு, கோபாலபுரம் வழியாக கங்கையம்மன் கோயிலை வந்தடைந்தது, ஊர்வலமாக வரும் சிரசுக்குவழிநெடுகிலும் தாரை, தப்பட்டையுடன் இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர்.
கோயிலில் உள்ள சண்டாளி உடலில் அம்மனின் சிரசு அமைக்கப்பட்டது.பின்பு பக்தர்கள் தொடர்ந்து வழிப்பட்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடக பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.
குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டு உளளது.
Comments
Post a Comment