இலவம்பாடியில் அக்னி வசந்த விழா
வெகுவிமர்சியாக மஹாபாரதமும், துரியன் பீமண் நாடக நிகழ்ச்சியில் காலையில் துரியன் படுகளம், மாலையில் தீமிதி விழா!
சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, இலவம்பாடியில் இராமாயண, மஹாபாரதம் மற்றும் முள்ளுக் கத்திரிக்காய்க்கும் புகழ்பெற்ற இலவம்பாடி கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ பாண்டவ சமேத பாஞ்சாலி அம்மன் திருக்கோயில் 80ம் ஆண்டு அக்னி வசந்த விழா முன்னிட்டு பிப்-10, தை-27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மஹாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் வைகாசி 2ல் பகா சூரன் வதமும், வைகாசி-3ல்அர்சுனன் வில் வளைப்பு மற்றும் திரௌபதியம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
மேலும் மஹாபாரத நாடக முதல் நாளாக மே-19ல் வைகாசி-4ம் தேதி இரவு அர்ச்சுனன் வில் வளைப்பு நாடகம் தொடங்கி, 22ல் அர்சுனன் தபசு,23ல் காலையில் 10 மணிக்கு தபசு ஏரி, பக்தர்களுக்கு வேண்டியது நிறைவேற பூ,எலுமிச்சை, தாளிசரடு, மஞ்சல் குங்குமம் வீசப்பட்டது. மே.25ல் அரவான் கடபளி நாடகம், 28ல் காலை 10மணியளவில் உலகளவில் எங்கும் காணக்கிடைக்காத அளவில் 35அடி உயரத்தில் கட்டப்பட்ட அரவான் சிலைக்கு சிறசு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து களபளி நிகழ்ச்சி நடைபெற்றது.
மே.27ல் பதினெட்டாம் போர், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10மணியளவில் வெகுவிமர்சியாக மஹாபாரதமும், துரியன் பீமண், காந்தாரி வேடமனிந்து, உலகளவில் எங்கும் காணக்கிடைக்காத அளவில் 116 அடி நீளத்தில் துரியன் உருவம் மற்றும் காலடியில் ஜெகுனி மாமா உருவம் வடிவமைத்து மலர்கள் தூவி பூஜைகள் செய்து நாடக நிகழ்ச்சியில் காலையில் பதினெட்டாம் போர் (சண்டை) துரியன் பீமன் வதம் அதிகரித்து புராணத்தின்படி துரியன் தொடையிலுள்ள உயிர் மீது பீமன் அடித்து கொன்றுவிட்டான். துரியனின் தாய் காந்த்ரி வேடமனிந்து மகன் இறப்பு தாங்கமுடியாமல் வாயிலும், வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறி அழுது பொதுமக்களுடன் துக்கம் அனுசரித்து துரியன் படுகள நிகழ்ச்சி கோலாகளமாக நிறைவுபெற்றது.
மே.28ம் தேதி அன்று ஏரிக்கோயில் தாய் திரௌபதி அம்மனிடமிருந்து பம்பை மேளத்ளத்துடன் ஜலம் வைத்து பூஜை செய்து அம்மன் வழிகாட்டுதலில் அம்மன் உத்தரவோடு சென்று மாலையில் அம்மன் பூங்கரகம், அக்னி கம்பம், கொந்தம் கொடி, அக்னி கம்பம் நட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மடியில் அக்னி வைத்து கட்டி வழிபட்டு பூ போட்டு அம்மன் சிலைகளுடன் கோ இந்தா.. கோ இந்தா... என்ற கோஷத்துடன் அக்னியில் இறங்கினர். இவர்களுடன் பின்தொடர்ந்து ஏராளமான பகதர்கள் அக்னியில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தி அம்மன் தரிசனம் பெற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அம்மனுக்கு நன்கொடைகள் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து மஹாபாரதத்தின் இறுதியாக 29ம் தேதி திங்கட்கிழமை மஹாபாத புராணப்படி 56தேசத்திற்கு ராஜாவாக தரும ராஜாவுக்கு பட்டாபிஷேகமும், முடிசூட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி இறக்கினர். இந்நிகழ்ச்சியில் இலவம்பாடி தார்வழி, தார்வழி கல்லாங்குளம் மலைசந்து, குடிசை, மோட்டூர், ஈச்சங்காடு, கம்மாரபாளையம், கன்னிகாபுரம், ராமாபுரம், மருதவல்லிபாலையம், புலிமேடு கிராம பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தாகம் தீர்க்கவும், பசி போக்கும் வகையில் நீர்,மோர், பானகம், என தண்ணீர் பச்சைபந்தள்கள் மற்றும் இரண்டு இடத்திற்கும் மேற்பட்ட இடகூடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட திட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, கலந்து கொண்டனர். ஆலயத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டனர். மிகப்பெரியளவில் அன்னதானம் ஏற்பாடு செய்து அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனர்கள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து அயராது ஒத்துழைப்பு அளித்த கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஊராட்சி எழுத்தர், தூய்மைப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர்கள், தீயணைப்பு படையினர், செய்தியாளர்கள், மின்சார துறையினர்கள், பிரசங்க சொற்பொழிவாளர்கள் மற்றும் நாடக கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டனர். இத்திருவிழா இலவம்பாடி, தார்வழி ஊர்பொதுமக்கள் தலைமையில், சுற்று வட்டார கிராம பொதுமக்கள் முன்னிலையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இத்திருவிழா மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு சமூக ஆர்வலரும், ஆண்மீகவாதியும், செய்தியாளருமான டாக்டர்.எம்.ராஜ்பாபு பானுநந்தினியால்
இச்செய்தியை தொகுத்து வழங்கப்பட்டது.
Comments
Post a Comment