வேலூர் அடுத்த விருதம்பட்டில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவ முகாம்
வேலூர் விருதம்பட்டில் மக்களை தேடி மருத்துவம்
வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உத்தரவுப்படி மக்களை தேடி மருத்துவம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் படி மாநகராட்சி முதலாவது மண்டலம் வார்டு 15 (விருதம்பட்டில்) தூய்மை பணியாளர்கள் பணிபுரியும் வார்டு அலுவலகத்தில் மருத்துவர்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், தொகுப்பு ஊதியம், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், எம்சிசி, டிபிசி பணியாளர்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்துகொண்டார்.
Comments
Post a Comment