காட்பாடியில் கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3 - ம் ஆண்டு நினைவு அஞ்சலி
காட்பாடியில் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட அனைத்து முன்னாள் இராணுவத்தினர் சார்பில் 15-ம் தேதி வியாழக்கிழமை காலையில் 15.06.21-ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளதாக்கில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 இராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதன் 3-ம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு புகைபடத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் கே.சிவக்குமார் தலைமையில் சிறப்பு விருந்தினராக 10-வது என். சி.சி.உதவி இயக்குநர் வெல்வர் சோல்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Comments
Post a Comment