வேலூர் கந்தநேரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வேலூர் அடுத்த கந்தனேரியில் பாரதப் பிரதமரின் 9-ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வேலூர் அடுத்த கந்தனேரியில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் 9-ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய அமைச்சர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் விமானமநிலையத்திற்கு பிற்பகல் வந்தார்.
அவரை பிஜேபியின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அங்கிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு காரில் சென்றார்.
பின்பு பொதுக்கூட்டத்தில் பேசியபின்பு ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றார்.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் செங்கோல் வழங்கினார்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் வேலூர் இக்பால், வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய துணை இராணுவ படையினர், தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Comments
Post a Comment