வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை திங்கள்கிழமை பட்டமளிப்பு விழா
மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது.
இதனுடைய 17-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் 19-ம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தருமாருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்குகின்றார்.
சிறப்பு விருந்தினராக சாலை போக்குவரத்து மற்றும் சிவில்விமான போக்குவரத்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
ஏற்பாடுகளை துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் (பொ) விஜயராகவன் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment