வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா அங்குள்ள அரங்கில் 19-ம் தேதி திங்கள்கிழமை பகல் 11.30 மணிக்கு துவங்கி 1.30 மணிவரை நடந்தது.
தமிழக ஆளுநர் மற்றும் வேந்தர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி நேரடியாக 564 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் மத்தியசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திருவள்ளூவர் பல்கலை. துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர்(பொ) விஜயராகவன், ஆட்சி மன்ற குழுவினர் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பல்கலைகழகத்தை கட்ட துணையாக இருந்த காட்பாடி தொகுதி எம்எல்ஏ மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு இந்த பட்டமளிப்பு விழாவில் அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment