காட்பாடியில் சர்வதேச யோக தினம்


                   சர்வதேச யோகா நாள் 9வது ஆண்டு விழா முன்னிட்டு காட்பாடி ரெடகிராஸ் சங்கம், சுவாசம் இயற்கை யோக மருத்துவமனை, இயற்கை வாழ்வியல் இயக்கம், காட்பாடி லயன் சங்கம், காட்பாடி காந்திநகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் யோகா விழிப்புணர்வு பேரணியை ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன் தொடக்கி வைத்தார் மற்றும் பயிற்சிகளை வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதாவன்னியராஜ் தொடக்கி வைத்தார்.
நிகழ்சிக்கு காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர்  செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
யோக நாள் குறித்து  தலைமை தாங்கி பேசினார்… அப்போது அவர் கூறியதாவது…
சர்வதேச யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முதல் சர்வதேச யோகா தினம்  முதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 6வது ஆண்டு விழா இன்று நடைபெற்று வருகிறது என்றார்.

விழிப்புணர்வு பேரணி
காட்பாடி காந்திநகர் மின் வாரிய அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன் தொடக்கி வைத்தார் இப் பேரணி கல்லூரி சந்திப்பு, ஓடைபிள்ளையார் கோயில் வழியாக சித்தூர் பேருந்து நிறுத்த சந்திப்பினை அடைந்ததது.  அதற்கு அருகில் உள்ள ஶ்ரீ நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்ற யோசான பயிற்சிகளை வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதாவன்னியராஜ் தொடக்கி வைத்தார்.
          
      யோகா பயிற்சிகளை சுவாசம் இயற்கை யோக மருத்துவமனை மருத்துவர் டாக்டர் இரா.சந்தானலட்சுமி, டாக்டர் எஸ்.குமரன் ஆகியோர்  செய்து காட்டி விளக்கம் அளித்தனர் அப்போது அவர் கூறியதாவது..
யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும்.
யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி. என்றார்..  யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள்.
யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.  என்றார் மேலும் பல்வேறு யோக பயிற்சிகள் செயல் விளக்கம் அளித்தார்.
இயற்கை நல வாழ்வில் இயக்கத்தின் தலைவர் ம. தசரதன் இயற்கை வாழ்வியல் மற்றும் யோகா குறித்து பேசினார்.
  
செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாராஜேந்திரன், நிர்வாக இயக்குநர் ஆர்.சுடரொளியன், துணை நிர்வாக இயக்குநர் துர்கா, மற்றும் குழுவினர் மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கினர்.    காட்பாடி ரெட்கிராஸ் அவைதுணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் தங்கவேல்,  காட்பாடி லயன் சங்க மாவட்ட தலைவர் கே.பிரகாஷ் காட்பாடி காந்திநகர் வியாபாரிகள் சங்க தலைவர் திருமகள் செல்வமணி துளிர் பள்ளி தலைமையாசிரியை த.கனகா அனைத்து வணிகர் சங்க தலைவர் ஞானவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்