வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்-கோலாகலம்
வேலூர் கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரா கோயில் 4-வது மகா கும்பாபிஷேகம் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த சில தினங்களாக யாகசாலை பூஜை நடைபெற்றது.
பெரிய, சிறிய கலசங்கள், கொடிமரம், ஆகியவற்றுக்கு தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள், புதிய தங்கதேர் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1982, 1997, 2011-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. 1981 - ம் ஆண்டு கோட்டையில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியர் தலைமையில் 170 சிவாச்சாரியார்கள், வேதவிற்பன்னர்கள் மற்றும் 50 ஓதுவார்களின் தமிழ் வேதம் திருமுறைகள் பாராயணத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீஜலகண்டேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மா, மகாதேவமலை மகானந்தா விபூதி சாமியார், முன்னாள் வேலூர் ஆட்சியர்கள் கங்கப்பா, ராஜேந்திரன், கோயிலின் முக்கிய நிர்வாகிகள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், தொழிலதிபர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்தும் சரியாக திட்டமிடாத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையினர் பக்தர்களிடம் கெடுபிடி காட்டினர்.
கோட்டைக்குள் வந்து செல்ல ஒரே வழி இருந்ததால் பக்தர்களுடன், காவல்துறையினரும் திணறினர்.
முக்கிய பிரமுகர்கள் கோட்டைக்குள் இருந்து வெளியே வர (காரில்) மிகவும் சிரமப்பட்டனர்.
காவல்துறையினரின் சரியான திட்டமிடாத காரணத்தினால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக பக்தர்கள் காவல்துறையினர் மீது குற்றம்சாட்டினர்.
Comments
Post a Comment