விண்ணம்பள்ளியில் மகாபாரத சொற்பொழிவு ஆரம்பம்
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், விண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள தர்மராஜர் ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
விண்ணம்பள்ளி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜர், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சிதிலமடைந்து காணப்பட்டது. தர்மராஜர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக நியமி
க்கப்பட்டுள்ள டி. கே. முரளி இந்த கோயிலை முழுவதுமாக புணரமைத்து புதுப்பொலிவு பெறச் செய்தார். அத்துடன் கோயில் நுழைவு வாயிலில் புதியதாக நுழைவு வாயில் அமைத்து அதை அழகு மிளிரச் செய்தார். அதே போன்று மகாபாரத சொற்பொழிவுகளை பொதுமக்கள் அமர்ந்து கேட்பதற்கு மகாபாரத அரங்கு ஒன்றினை 13 நாட்கள் இடைவெளியில் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளார் அறங்காவலர் குழு தலைவர் டி. கே. முரளி. இந்த கோயிலை பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டதால் இந்த நிலைக்குச் சென்றது. இந்நிலையில் மீண்டும் அந்த கோயிலை புதுப்பித்து பக்தர்கள் திரண்டு வரும் அளவிற்கு நிலைமையை மாற்றி காட்டியுள்ளார் அறங்காவலர் குழு தலைவர் டி .கே. முரளி என்று சொன்னால் அது மிகையாகாது .தற்போது ஸ்ரீ தர்மராஜர், ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு தினமும் மகாபாரத சொற்பொழிவு இடைவிடாது நடந்து வருகிறது இதை முன்னிட்டு கோயிலில் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் இடைவிடாது உணவு சுமார் 1500 பேருக்கு வேளை ஒன்றுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது .காலை, மாலை டிபன் வகைகளும், மதியம் அறுசுவை உணவும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. ஒரு திருமணத்துக்கு கூட செய்ய முடியாத இந்த பணியை இடைவிடாது மூன்று வேளையும் ஒரு வேலைக்கு ஆயிரத்து 500 பேர் வீதம் மூன்று வேளையும் 4500 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தொடர்ந்து 19 நாட்கள் இடைவிடாது மூன்று வேளையும் உணவு இடை வெளி விடாமல் தொடர்ந்து பக்தர்களுக்கு பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .இந்தப் பணிகளை அறங்காவலர் குழு தலைவரும் கோயில் தர்மகர்த்தாவுமான டி .கே. முரளி சிறப்புடன் எடுத்து செய்து வருகிறார். இதை கண்களால் காணும் பொதுமக்கள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் டி கே முரளிக்கு என்று சொன்னால் அது மிகையாகாது .இந்த விழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சிகார கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து மே மாதம் 25ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் மகாபார மகாபாரத கொடியேற்றமும் ,அன்று முதல் பிற்பகல் 2 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு ஜூன் 1ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு நாடகமும் ஜூன் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு துரியோதனன் படுகளமும், அன்று மாலை 6 மணிக்கு அக்கினி வசந்த விழாவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறங்காவலர் குழு தலைவர் டி .கே. முரளி செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விண்ணம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முரளி கலந்து கொண்டு சிறப்பித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அத்துடன் அர்ஜுனன் தபசு மற்றும் மகாபாரத சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment