செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம்
P.T.Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15.06.23 (வியாழக்கிழமை) அன்று தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம், கணினி மயமாக்கப்பட்ட நூலக பிரிவு திறப்பு மற்றும் அடிப்படை அறிவியல் கருத்துக்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீடு என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு P. T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் நீதிபதி பொன். கலையரசன் தலைமை தாங்கினார். முதலாவதாக, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நூலகத்தில் டிஜிட்டல் நூலக பிரிவினை தொடங்கி வைத்தார். பின்னர், செமி கண்டக்டர்கள் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கை தலைமையேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் Dr. K. சுரேஷ்குமார் வரவேற்புரை வழங்க, அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. P. பழனிசாமி, இயக்குனர் Dr. M. அருளரசு மற்றும் அறங்காவலர் . L. அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் நீதிபதி பொன். கலையரசன் தலைமை உரையாற்றினார். உரையின் இறுதியில், மாணவர்களுக்கான அடிப்படை அறிவியல் தகவல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. பேராசிரியர்
Dr. B. பாலகிருஷ்ணன் கருத்தாளர் பற்றி முன்னுரை வழங்க, Dr. S. முருகவேல், இயற்பியல் பேராசிரியர் மற்றும் துறை தலைவர், தந்தை பெரியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் மாணவர்களுக்கு செமி கண்டக்டர்கள் பற்றிய அடிப்படையில் எதிர்கால தேவைகள் மற்றும் அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கருத்தரங்கின் இறுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பேராசிரியர். அருள்மொழி தேவி நன்றியுரை ஆற்ற தேசிய கீதத்துடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
Comments
Post a Comment