வேலூரில் 217 -வது ஆண்டு சிப்பாய் புரட்சி தினம் !!!
வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 - வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் துரைமுருகன் !
வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஆங்கிலேயேருக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் புரட்சியில் ஆங்கிலேயர்களும், இந்திய சிப்பாய்களும் உயிரிழந்தனர்.
இதை நினைவுகூறும் வகையில் வேலூர் கோட்டை எதிரில் மக்கான் பகுதியில் நினைவு தூண் அமைக்கப்பட்டது.
இன்று ஜூலை 10-ம் தேதி திங்கள்கிழமை 217-வது நினைவுதினம். மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட நினைவு தூணுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வேலூர் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், முன்னாள் படைவீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
வேலூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
Comments
Post a Comment