வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் விஷ்ணு பகவான் பிறந்த நட்சத்திரமான திருவோணத்தை முன்னிட்டு
கோயில் வளாகத்தில் கல்யாண ரங்கநாதர் மற்றும் தாயாருக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு இன்று 5-ம் தேதி புதன்கிழமை இரவு அலங்காரம் செய்யப்பட்ட ரங்கநாதர், தாயாருக்கு திருவோண தீபம் ஏற்றி தீபாராதனை நடந்தது.
பக்தர்களின் தரிசனத்திற்கு பின்பு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
அலங்காரத்தை ஸ்ரீரங்கம் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
Comments
Post a Comment