காட்பாடி அடுத்த பொன்னை ஆந்திர எல்லையில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் !
காட்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி !!!
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி, காட்பாடி தாலுகா பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு எல்லை பகுதி சாலை ஓரமாக பதுக்கிவைத்திருந்த 13 மூட்டைரேசன் அரிசி (500 கிலோ)யை பறிமுதல் செய்து அதனை திருவலம் நுகர்பொருள் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. உடன் உதவியாளர் திவாகர் உள்ளார்.
Comments
Post a Comment